சென்னை, அக்.1– இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப் பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகு களையும் உடனடியாக விடு வித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளி யுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு 29.09.2024 அன்று எழுதியுள்ள கடிதத்தில், இராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து IND-TN-10-MM-411 மற்றும் IND- TN-10-MM-544 பதிவு எண்களைக் கொண்ட இரண்டு படகுகளில் 28.09.2024 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இன்று 28.19.2024 நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தனது கடிதத்தில் கவலை படத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப் படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும் அவர்களது வாழ்வில் நிச்ச யமற்ற தன்மையையும் ஏற்படுத்தி யுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த சிக்கலான பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதி யான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற் கெனவே வலியுறுத்தியுள்ளதா கவும், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 27.09.2004 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத் தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண் டுள்ளார்.