சென்னை, அக்.1- இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக் காட்டான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நேற்று (30.9.2024) சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் 70 சுய உதவிக்கு ழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு 2022-2023 மற்றும் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கான மணிமேகலை விருதுகள் மற்றும் ரூ.1 கோடியே 18 லட்சம் விருதுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் 516 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 6,135 உறுப்பினர்களுக்கு ரூ.30.20 கோடி மதிப் பிலான வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குவதில் சிறப்பாக செயல்படும் 13 வங்கிகள் மற்றும் வங்கிக்கிளைக ளுக்கு வங்கியாளர் விருதுகளையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் விருதுகளை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் ஊரக வாழ் வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 91 ஆயிரத்து 985 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 750 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக் கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு
2011-2021 ஆகிய 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.84 ஆயிரத்து 815 கோடி மட்டுமே வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டது.
ஆனால் தி.மு.க. அரசு அமைந்த 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 ஆண்டு களில் மட்டுமே ரூ.92 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த மணிமேகலை விருதுகள் கடந்த 10 ஆண்டுக ளாக வழங்கப்படவில்லை. தற்போது மீண்டும் மணிமேகலை விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இது தான், மகளிர் முன்னேற்றத் தில் தி.மு.க. அரசுக்கு இருக் கும் அக்கறைக்கு எடுத்துக் காட்டு.
இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட் டிற்கு எடுத்துக் காட்டான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
54 லட்சம் உறுப்பினர்
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப் பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற் றனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் நன்றி கூறினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப்சிங் பேடி பேசும்போது, ‘தமிழ் நாட்டில் 4.73 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. ஊரகப் பகுதியில் 3.29 லட்சம், நகரப் பகுதிகளில் 1.44 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உள் ளன. அவற்றில் 54 லட்சத்திற் கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.