கிருட்டினகிரி, அக். 1– கிருட்டினகிரி மாவட்டம் கிருட்டினகிரி நீதிக்கட்சி குடும்பத்தை சேர்ந்த கிருட்டினகிரி பேரூராட்சி மன்ற மேனாள் தலைவர் ஜி.அனுமந்த அவர்களின் அன்பு புதல்வரும் ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் துணைச் செயலாளர் மிசா. ஜி.எச். கோதாண்டராமன் அவர்களின் தம்பியுமான, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – கார்நேசன் திடலில் பெரியார் படிப்பகம் நூலகம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு இடம் வழங்கிய பெருங்கொடையாளர் கார்நேசன் அறக்கட்டளை செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி கிருட்டினகிரி மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் அவர்கள் 26.9.2024 அன்று மறைவுற்றார் என்ற தகவலறிந்த உடனே தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன், மாவட்ட தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், நகரத் தலைவர் கோ.தங்கராசன், நகர செயலாளர் அ.கோ.இராசா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கழக சார்பில் இறுதி மரியாதை
கார்நேசன் திடல் அறக்கட்டளை செயலாளர் ஜி.எச்.லோகாபிராம் அவர்களது மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் 27.9.2024 அன்று பகல் 12.00 மணியளவில் கார்நேசன் திடல் பெரியார் மய்யத்திலிருந்து கழகத் தோழர்கள் ஊர்வலமாக சென்று சுயமரியாதைச் சுடரொளி ஜி.எச்.லோகாபிராம் அவர்கள் மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம், தலைமை கழகம் சார்பில் கழகக் கொடி போர்த்தி மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இரங்கல் கூட்டம்
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் தி. கதிரவன், சி.சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், நகரச் செயலாளர் அ.கோ.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருட்டினகிரி வழக்குரைஞர் சங்க மேனாள் தலைவர் வழக்குரைஞர் ஆர்.சி.சேகர், ஊற்றங்கரை வழக்கறிஞர் சந்திரசேகர், கிருட்டினகிரி பிரபல மருத்துவர் மரு.சுந்திரமூர்த்தி, திமுக நகர அவைத் தலைவர் ஜி.மாதவன்,மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் சு. அன்புச் செல்வன், பெரியார் மய்ய புரவலர் தொழிலதிபர் முல்லை மதி, அதிமுக மேனாள் மாவட்டச் செயலாளர், மு.ச.ம.உ. வழக்குரைஞர் முனி.வெங்கடப்பன், மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி தலைவரும் விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ.நாராயணமூர்த்தி, ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், கிருட்டினகிரி மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் இரங்கலுரைக்கு பின் திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை செயராமன் தலைமை கழகம் சார்பில் நிறைவாக இரங்கல் உரையாற்றினர்.
தமிழர் தலைவர் இரங்கல்
தன் உடன் சட்டக் கல்லூரியில் பயின்ற தோழர் வழக்குரைஞர் பெரியார் கொள்கை மீது தீராப் பற்றுக் கொண்ட பெருந்தகையாளர் கார்நேசன் அறக்கட்டளை செயலாளர் சுயமரியாதை வீரர் ஜி.எச்.லோகாபிராம் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்தவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மறைந்த லோகாபிராம் அவர்களின் மகன் ஜி.எச்.எல்.அசோக் ஆனந்த் அவர்களிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதலை கூறினார். அவர்களது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி இரங்கல் கூட்டத்தில் வாசித்தார்.
இறுதி நிகழ்வில் மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப. இரமேசு, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி. முருகேசன், துணைத் தலைவர் சா.தனஞ்செயன், மத்தூர் மாணவர் கழகம் ச.அகரன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன், பையூர் கிளைத் தலைவர் மெக்கானிக்கல் சரவணன், மாணவர் கழகம் செ.வீரபாண்டி, கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, காவேரிப்பட்டணம் மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா உள்பட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் மற்றும் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் அவர்களின் மறைவிற்கு மாவட்ட தி.மு.க. மேனாள் செயலாளரும் அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி மாநில செயலாளர் தி.செங்குட்டுவன், அதிமுக துணைப்பொதுச் செயலாளர் மேனாள் அமைச்சர் வழக்குரைஞர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., கிருட்டினகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சி மூத்த வழக்குரைஞர் அ.அசோகன், மாவட்ட அரசு வழக்குரைஞர் மு.விஸ்வபாரதி மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் நேரில் வருகை தந்து மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். கிருட்டினகிரி இரவுண்டானா பகுதியிலிருந்து கார்நேசன் திடல் பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் மற்றும் நடைபாதை கடை சிறு வணிகர்களும் 27.9.2024 அன்று ஒருநாள் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இரங்கலை தெரிவித்தனர்.