காஞ்சியில் சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு!

3 Min Read

காஞ்சிபுரம், அக். 1– காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, மிலிட்டரி சாலை யில் உள்ள சாய்சண்முகம் விருந்தினர் மாளிகையில் 22.9.2024 அன்று காலை 11 மணியளவில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ஆகிய முப் பெரும் விழாவினையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை குடும்பங்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட கழக மகளிரணித் தோழர் அ. ரேவதி தலைமை தாங்கினார். ர.உஷா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மருத்துவர் மு. குழலரசி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கமாக காஞ்சி உலகஒளி, இசைக்கலைஞர் பாலன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தணி தோழர் க.ஏ. தமிழ்முரசின் மந்திரமல்ல! தந்திரமே! என்னும் பகுத்தறிவு விழிப்புணர்சவு நிகழ்ச்சி நடைபெற்றது. பல நிகழ்ச்சிகளை செய்து காட்டி அறிவியல் விளக்கம் கூறினார்.

12.00 மணியளவில் தொடங்கிய உரையரங்கத்தில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் சாரதாதேவி பாலின சமத்துவம் குறித்த பல செய்திகளை, தம் வாழ்வியல் செயற்பாடுகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார்.

மக்கள் மன்றம் நிறுவனர்களில் ஒருவரான வழக்குரைஞர் ஜெஸ்ஸி, ஒடுக்கப்பட்ட மக்களிடமும் பெண்களி டம் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பெரியாரின் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன், சுயமரியாதை இயக்க வளர்ச்சி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் தமிழினத்திற்கு ஆற்றிய தொண்டுகள், பெரியாரின் அணுகுமுறை முதலியவை குறித்து சிறப்பாக உரையாற்றினார்.

நிறைவாக, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி அவர்தம் இணையர் மு. தவமணி மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர் பா.கதிரவன் அவர்தம் இணையர் ர.உஷா ஆகியோரின் இணயேற்பு 30ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
160 நபர்கள் கொள்ளவு கொண்ட குளிரூட்டப்பட்ட அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த சுயமரியாதை குடும்பங் களுக்கு இனிப்புடன் கூடிய பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

விழாவில், தலைமை கழக அமைப் பாளர் பு. எல்லப்பன், காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர்
கி. இளையவேள், இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர் சு. லோக நாதன், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை சுந்தரம், அறிவு வளர்ச்சி மன்ற அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், மாநில கழக இளைஞரணி துணை அமைப்பாளர் மு. அருண்குமார், காஞ்சிபுரம் மாநகர திராவிடர் கழகச் செயலாளர் ச. வேலாயுதம், மக்கள் மன்றம் நிறுவனர் தோழர் மகேஷ், திமுக தோழர் காரை. கு. அருளானந்தம், இந்திய பொதுவுடமைக் கட்சி தோழர் ஜெ. கமலநாதன், தமிழ் உரிமை கூட்டமைப்பு நிறுவனர் காஞ்சி அமுதன், இரவிபாரதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பா.இளம்பரிதி, மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர்

வி. கோவிந்தராஜ், கி. இரவிந்திரன், அரக் கோணம் பிரபாகரன், தேவிகாபுரம் கழகத் தோழர் வேதாசலம், திருவாரூர் கழகத் தோழர் கவித்தம்பி, வாலாஜாபேட்டை பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இராமு, கலைவாணன், விஜயகுமார்,
மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெ, சின்னதம்பி, தன்னாட்சி தமிழகம் பெ.பழனி, இரா.சக்திவேல், பொதுவுடமைக் கட்சி தோழர் வழக்குரைஞர் லாரன்ஸ், தமுஎகச கு ஆறுமுகம், களியனூர் தோழர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *