ஒப்புக் கொள்கிறார் அண்ணாமலை
* மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு
இந்திய அரசு 50 விழுக்காடு நிதி பங்களிப்பு வழங்க வேண்டும்.
– பிரதமருக்கு, தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை கடிதம்
>> ஆக, தமிழ்நாடு மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கு இதுவரை ஒன்றிய அரசு ஒரு பைசாவும் கொடுக்கவில்லை என்பதை அண்ணாமலையே ஒப்புக் கொள்கிறார்!
இது பொருந்துமா?
* அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைக்க வேண்டும்.
– உச்சநீதிமன்றம் கருத்து
>> ஆக, ராம ராஜ்ஜியம் அமைக்கப் போகிறோம் என்கிறார்களே, அதற்கும் இது பொருந்துமா?