கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.9.2024

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* துணை முதலமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் – 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர்
ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதிலளிப்பேன் என துணை முதலமைச்சர்

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

* உயர்கல்வித்துறை அமைச்சராக கோவி.செழியன் நியமனம்; தஞ்சை மாவட்டத்திற்கு ஓர் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
*தமிழ்நாடு அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, மனிதவள மேம்பாடு துறை என தாழ்த்தப்பட் டோருக்கு முக்கிய துறைகளில் பதவி வாய்ப்பை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அரியானா தேர்தலில் பாஜகவை வலுப்படுத்த கிராமத்தினர் வாக்குகளைக் கவர ஆர்.எஸ்.எஸ். முயற்சி.

தி இந்து:

* நகர்ப்புற சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92% பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆய்வில் தகவல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராட்டிராவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரிப்பு. சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டி யிடும் நிலையில், முதலமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ளது.
* பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் அரசமைப்புச் சட்டத்தை, அம்பேத்கரை மதிக்கவில்லை – மல்லி கார்ஜூனா கார்கே குற்றச்சாட்டு.
* தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி.
* ஒரே தேசம், ஒரே தேர்தல்: இன்னுமொரு ஜும்லா – கபில் சிபல் சாடல்.

தி டெலிகிராப்:

*மாற்றத்திற்கான மனநிலையில் அரியானா: பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலும் பாஜக தோல்வி அடையும், ஹிசார் பாஜக போட்டி வேட்பாளர் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தில் தலைவராக உள்ள சாவித்திரி ஜிண்டால், பாஜகவுக்கு எச்சரிக்கை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்த ஆண்டு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முந்தைய சுற்றுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் சுற்றில், அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., கட்-ஆஃப்கள் ஓரளவு அதிகரித்துள்ளன.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *