சென்னை, செப்.30- தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சர்களான செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், பனை மரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் நேற்று (29.9.2024) பதவியேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 29.9.2024 அன்று நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு அமைச்சர் கோவி.செழியனுக்கு உயர் கல்வித்துறை ஒதுக்கீடு அமைச்சர் ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கீடு அமைச்சர் சா.மு.நாச ருக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்தி ருந்தனர்.
சென்னை ஆளுநர் மாளி கையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.