பெரம்பலூர், செப்.30 தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலை மையில் மாவட்ட செயலாளர் விஜயேந்திரன் முன்னிலையில் பெரம்பலூர் நகரில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதன் துவக்கமாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து, பின்பு தந்தை பெரியார் அவர்க ளின் பட அணிவகுப்பு காந்தி சிலை வழியாக பெரியார் சிலை வந்தடைந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பின்பு நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் இல்லத்தில் கொடி யேற்றி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று, தோழர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெரியார் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.