தமிழ்நாட்டின் சிந்தனை சிற்பிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இருவரின் பிறந்த நாள் விழாக்கள் ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (ஜப்பான்) சார்பில் நடைபெற்றது.
அந்த விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூர் வழியாக ஜப்பான் சென்று வந்தார்கள். அப்போது ஜப்பான் நாட்டில் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் தஞ்சை மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த இரா.செந்தில்குமார் அவர்கள் இரண்டு “தமிழ் இலக்கிய கதை” நூல்களை வழங்கியுள்ளார்கள்.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன், செயலாளர் தமிழ்ச்செல்வி-ராஜராஜன், செயற்குழு உறுப்பினர் தோழர் மாறன் உள்ளிட்டோர் சார்பாகவும், திரு அருண் மகிழ்நன் & நளினி கோபால் அவர்கள் எழுதியுள்ள “ஊர் திரும்பியவர் – வேர் ஊன்றியவர்”, “தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர்” என்ற நூலின் தமிழ் பதிப்பும், ஆங்கிலப் பதிப்பான “Sojourness to Settlers – Tamils in Southeast Asia and Singapore” என்ற ஆங்கிலப் பதிப்பு நூலும் தமிழர் தலைவர் மூலமாக பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கினார்கள். அதனை அப்படியே நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.
மிக்க நன்றி.
– நூலகர்
பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யம்