டெசோ அமைப்பின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தலை மையில், அண்ணா அறிவாலயத்தில் 15-4-2013 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர், தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மூத்த வழக்குரைஞர் சண்முகசுந்தரம், மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார், கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல் தீர்மானம்:
மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை தடை செய்ய முடியாது
இராமேஸ்வரத்தை ஒட்டிய “ஆதாம்” பாலம் மற்றும் நாகை மாவட்டம், கோடியக்கரை ஆகிய பகுதிகளின் இடையில் இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள கடற்பகுதி “பாக் ஜலசந்தி” என்று அழைக் கப்படுகிறது. இப்பகுதி வரலாற்று அடிப் படையில் உருவான நீர்ப் பரப்பாகும்.
“பாக் விரிகுடா கடல் பகுதி பல நூற்றாண்டு காலமாக பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். பாரம்பரியமாக இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முழு உரிமையோடு இக்கடற்பரப்பு முழுமையிலும் மீன் பிடித்து வந்தனர். இருநாடுகளின் விடுதலைக்குப் பின்னரும் இவ் வுரிமை இரு நாட்டு மீனவர்களிடையே நீடித்து வந்தது.
1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் பிரிவு 6இன்படி இரு நாட்டு மீனவர் களுக்கும், மீன் பிடிக்கும் உரிமை தொடர்ந்து வழங்கப்பட்டது.
அதாவது “பாக் விரிகுடா கட லில் இரு நாட்டு மீனவர்களுக்கும் காலங்காலமாக இருந்து வந்த மீன் பிடிக்கும் உரிமை எந்த மாறு தலுக்கும் உட்படுத்தப்படாமல் தொடர்ந்து நீடிக்கும் என்ற வகையிலேயே மேற்படி ஒப்பந்தம் அமைந்தது.
இந்திய அரசும், இலங்கை அரசும் இந்த ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இலங்கையோ அல்லது இந்தியாவோ மீனவர்கள் அனுபவித்து வரும் பாரம்பரிய உரிமை களைத் தடை செய்ய இயலாது. மேலும் இந்திய அரசாக இருந்தாலும், இலங்கை அரசாக இருந்தாலும் மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
பன்னாட்டு சட்டத்திற்குப் புறம்பாக இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது
இலங்கை அரசு எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுக்க முடியாது. ஆனால் இதற்கு மாறாக இலங்கை அரசு நாள்தோறும் இந்திய மீனவர்கள் பாரம்பரிய உரிமையின் அடிப் படையில் மீன் பிடிப்பதை ஏதாவது ஒரு வகையில் தடை செய்து வருகிறது.
இந்திய மீனவர்களின் படகு களைப் பறிமுதல் செய்தல், அவர் களுடைய மீன் வலைகளை அறுத்துச் சேதப்படுத்துதல், மீனவர்களைக் கைது செய்தல், மற்றும் அவர்கள் பிடித்த மீன்களைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்ற பன்னாட்டுச் சட்டத்திற்குப் புறம்பான செயல் களில் இலங்கை அரசின் கடற் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய மீனவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு நிரந்தர தீர்வைத் காணவில்லை
1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, திமுக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத் தான போது, குறைந்த பட்சம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், அங்கே நடைபெறும் கோவில் விழாவில் தமிழ்நாட்டு மீனவர்கள் கலந்து கொள் ளும் உரிமையும், மீனவர்களின் வலையை அங்கே உலர்த்திக் கொள் வதற்கான உரிமையும் அந்த ஒப் பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று திமுக அரசு வலி யுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப் பட்டன. ஆனால் 1976ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு, ஆளுநர் ஆட்சி தமிழ்நாட்டிலே நடைபெற்ற போது, அந்த ஒப்பந்தத்தில் இருந்த இந்த ஷரத்துகள் நீக்கப்பட்டு விட்டன.
எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீனவர் களுக்கு வழங்கி யுள்ள மீன் பிடிப்பதற்கான பாரம் பரிய உரிமையையும் மீனவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய ஒன்றிய அரசுக்குள்ளது. ஆனால் இதுவரை இந்திய மீனவர்கள் ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்டோர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுஞ்செயலைத் தடுக்கவும் இந்திய மீனவர்களைக் காப்பாற்றவும் இந்திய அரசு ஒரு நிரந்தரமானத் தீர்வு எதையும் இதுவரைக் காணவில்லை. வரலாற்று ரீதியான நீர்ப்பரப்பில் “நாடு சார்ந்த கடல் என்று எந்தப் பரப்பையும் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு நாட்டின் இறை யாண்மை என்பது குறிப்பிட்ட பூகோள வரை யறையைக் கொண் டது. ஆனால் மீன் பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்கு ஏற்ற “கடல் எல்லை எதுவும் வரலாற்று ரீதியில் உருவான கடல் நீர்ப் பரப்பில் கிடையாது என்பது உலகம் முழுவ திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் நியதியாகும்.
எனவே இலங்கை அரசு; 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத் தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியமான மீன் பிடிக்கும் உரிமை யையும் தொடர்ந்து மீறிச் செயல் பட்டு வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர் களைத் தொடர்ந்து தாக்கி வருகின்ற கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்ற நோக் கிலும், வரலாற்று அடிப்படையில் உருவான “பாக்-விரிகுடா பகுதியில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும் என்ற அவசியத்திலும், 1974ஆம் ஆண்டு இந்தியாவுக் கும் இலங்கைக்கும் இடையே செய் யப்பட்ட ஒப்பந்தத்தை அறவே ரத்து செய்திட இந்திய அரசு முன் வரவேண்டும் என்று “டெசோ வின் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறது.
2013இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
இன்னும் போராடும் நிலைதான். இதில் ஒரு முக்கிய கட்டம் தான் – அக்டோபர் முதல் நாள் மாலை நாகையில் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ள எழுசசி ஆர்ப்பாட்டம்!