இன்றைக்கு இந்தக் கரம் – அதை நினைக்கின்ற நேரத்தில், சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்னால், 1976 ஆம் ஆண்டில், மிசா காலத்தில், எவ்வளவு பெரிய கொடுமையை அனுபவித்த நேரத்தில், தளபதி மு.க.ஸ்டாலினை அடித்துச் சிறைச்சாலையில் உள்ளே தள்ளியபோது, அன்றைக்குக் கொடுத்த கரம் இருக்கிறதே, அந்தக் கரம்தான், இப்பொழுதும் ஆரத்தழுவி, அன்பு, அன்பு என்று அன்போடு வாழ்த்திக் கொண்டிருக்கின்றது. இது என்னுடைய கரம் அல்ல நண்பர்களே, தாய்க் கழகத்தினுடைய கோடான கோடி மக்களுடைய அன்பைப் பெற்ற கரம்.
இங்கே தலைவர்கள் பலர் சிறப்பாகக் கூடியிருக்கின்றார்கள். இந்த இயக்கத்தினுடைய வெற்றி எங்கே இருக்கின்றது என்று சொன்னால், வெறும் பதவிகளில் இல்லை. அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
காஞ்சி தி.மு.க. பவள விழாவில்
திராவிடர் கழகத் தலைவர்
அன்றைக்கு ‘மிசா’ சிறையில் தளபதிக்குக் கொடுத்த இந்தக் கரம் – இன்று ஆரத் தழுவுகிறது!
Leave a Comment