தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராகப் பதவியேற்குமுன் மானமிகு மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ெசன்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, தாய்க்கழகத்தின் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அமைச்சர்கள் உள்ளனர்.