காரைக்குடி, செப்.28- தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்பரைக் கூட்டங்கள் மற்றும் சிந்துவெளி (திராவிட நாகரிக) பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்துவதென காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கூட்டம் மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில், மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தனது உரையில்,
‘‘புதிய உறுப்பினர்களை எப்படி களப்பணிக்கு தயார்படுத்துவது, மானம் பாராத திராவிடர் கழகத் தொண்டனின் சமுதாயப் பணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத தொடர் பணியும், ஒவ்வொரு தோழரையும் அவர் நினைவோடு அணுகுகின்ற முறையும் தோழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்’’ என்றார்.
நிகழ்வில் கழகச் சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி நகரத் தலைவர் ந. செகதீசன், தேவகோட்டை நகரத் தலைவர் வீர.முருகப்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந.செல்வராசன், அ.பிரவீன் முத்துவேல், தேவ கோட்டை ஒன்றிய செயலாளர் அ.ஜோசப், புதிய தோழர் ஒ.சிறு வயல் அரவிந்த் செல்வா, ஆறு.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்டத் துணைச் செயலாளர் இ.ப. பழனிவேல் நன்றி கூறினார்.
கூட்டத்தில், தந்தை பெரி யாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா பரப்புரைக் கூட்டங்களை ஒன்றி யங்கள்தோறும் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
சிந்துவெளி (திராவிட நாக ரிக) பிரகடன நூற்றாண்டு கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
பொன்விழா கண்ட காரைக்குடி தந்தை பெரியார் சிலை வளாகத்தில் புதிய இரும்பு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களுக்கு உளங்கனிந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து தீர்மானிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 31 காரைக்குடியில் நடைபெற்ற குன்றக்குடி அடிக ளார் நூற்றாண்டு விழா வரவு- செலவு கணக்கு அவையில் எடுத்து வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
காரைக்குடி மாவட்ட கழகப் புதிய பொறுப்பாளர்கள்:
காரைக்குடி நகரச் செயலாளர்: அ. பிரவீன் முத்துவேல்
காரைக்குடி நகரத் துணைத் தலைவர்: பழனிவேல் ராசன்,
திருவாடானை ஒன்றியச் செயலாளர்: ஆண்டாவூரணி புரு சோத்தமன்.