இலால்குடி, செப்.28 இலால்குடி கழக மாவட்டம் பெருவளப்பூர் கிளை கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா 21.09.2024 அன்று மாலை சட்ட எரிப்பு வீரர்கள் திடலில் சிறப்பாக நடைபெற்றறது
கூட்டத்திற்கு வந்தவர்களை த.வல்லரசன் வரவேற்க, பா.திவ்ய நாதன் தலைமை தாங்கினார். இலால்குடி மாவட்ட தலைவர் ரா.வால்டேர் அருணாசலம், பன்னீர் செல்வம், சி.வீரமணி, முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இலால்குடி மாவட்ட மகளிரணி தலைவர் வா. குழந்தை தெரசா, பகுத்தறிவு ஆசிரியர் அணி செல்வி அன்புராஜ், கழக அமைப்பாளர் பா.ஆல்பர்ட், மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் க.பாலச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நடராசன், நகர தலைவர் அக்ரி.ஆறுமுகம் விடுதலைபுரம் இசைவாணன் ஆகியோர் உரையாற்றிய பின்னர் கழக சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரையாற்றினார்.
மேலும் கூட்டத்தில் புள்ளம்பாடி ஒன்றிய தலை வர் மு.திருநாவுக்கரசு, பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் விஜயேந்திர இன் மண்ணச்சநல்லூர் நகர தலைவர் மூ.முத்துசாமி, இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.பாலசுப்பிரமணியன் புள்ளம்பாடி நகரச் செயலாளர் பொற்செழியன் மற்றும் கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் பெரியார் பிஞ்சுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
நிறைவாக தோழர் ரா.கவுதமன் நன்றியுரை ஆற்றினார்
கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் பெரியார் மன்றத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வாழ்த்து முழக்கமிட்டனர்.