நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டன பேரணி, மாபெரும் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் நடைபெறுகிறது
பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலியன்நாகை மாவட்டம் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடிமாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.க.ஜீவா ஆகியோர் நாகை அக்கரைப்பேட்டை கிராம மீனவ அமைப்பை சார்ந்த செல்வகுமார்,சக்திவேல்,ராஜப்பா,ஜெயராஜ், அக்கரைப்பேட்டை மீனவர் கிராம பஞ்சாயத்தார் இரா.சவுந்தரபாண்டியன், செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து மீனவர் சமுதாய மக்களை பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்து ஆர்ப்பாட்டத்தை வெற்றி யடைய செய்ய வேண்டுகோள் விடுத்தனர் நிச்சயமாக மீனவர் சமுதாய மக்கள் பங்கேற்பார்கள் என உறுதி அளித்தனர் (27.09.2024)
அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு

Leave a Comment