பாரதிய ராஷ்டிர சேனா கட்சியைச் சேர்ந்த தெலங்கானா சட்டமன்றத்தின் முதல் அவைத் தலைவர் பந்தா பிரகாஷ், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான எஸ்.மதுசூதனா சேரி, மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீனிவாச கொண்ட், மேனாள் அமைச்சரும், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினருமான ஜி, கமலாகர் மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர்கள் பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர். அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியைச் சந்தித்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள், சமூக நீதி தொடர்பானவை குறித்து உரையாடினர். உடன்: திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ. கருணாநிதி, பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாடலில் கலந்து கொண்டனர்.
தெலங்கானா சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
Leave a comment