சென்னை, செப். 28- அஞ்சல் துறை பெயரில் தொடரும் பணமோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அஞ்சல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியா போஸ்ட் அலுவலகத்திலிருந்து பார்சல் அனுப்புவதாக பொதுமக்களுக்கு மோசடி கும்பல் குறுஞ்செய்தியை அனுப்புகிறது. முகவரி சரி இல்லாததால் பார்சல் டெலிவரி ஆகவில்லை என தெரிவிக்கப்படும். முகவரியை சரியாக பதிவிடுமாறு கூறி ஒரு லிங்க்கை மோசடிக் கும்பல் அனுப்பி வைக்கும்.
அதைத் தொடர்ந்து அஞ்சல் அலுவலகத்திலிருந்து பேசுவதாக ஓர் அழைப்பு வரும். வந்துள்ள பார்சல் திருப்பி அனுப்பப்படாமல் இருக்க லிங்க்கை கிளிக் செய்யவும் எனத் தெரிவிக்கப்படும். லிங்க்கை கிளிக் செய்ததும் போலி இணையதளத்துக்கு சென்று ரூ.80 முதல் ரூ.100 வரை என சிறிய தொகை செலுத்தக் கேட்கப்படும்.
சிறிய தொகை தானே என நினைத்து நாம் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்து பணம் அனுப்பியதும், அடுத்த சில நொடிகளில் நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடிக் கும்பல் எடுத்துவிடும்.
அஞ்சல் துறையை பொறுத்தவரை வாடிக்கையாளர்களிடம் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்களை கேட்பதில்லை. மேலும், எதிர்பாராத குறுஞ்செய்திகள், அழைப்புகள் வந்தால் அவற்றின் பின்னணியை ஆராய அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மய்யத்தை அணுகவும்.
அத்துடன்,காவல் துறை மற்றும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவிடமும் புகார் அளிக்கவேண்டும். எனவே, அஞ்சல் துறை பெயரில் வரும் குறுஞ் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
கூகுள் மேப்களில் எஸ்பிஅய் ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?
சேலம் சரக டிஅய்ஜி விளக்கம்!
நாமக்கல், செப்.28- கூகுள் மேப்களில் எஸ்பிஅய் ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் காவல்துறை சரக தலைமை இயக்குநர் உமா விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் துப்பாக்கிச் சூடு கற்களை வீசி காவல் துறையினரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என சேலம் சரக காவல்துறை தலைமை இயக்குநர் உமா தெரிவித்துள்ளார். தப்பிச் சென்ற இருவரில் ஜூமான் என்பவர் காவல் துறையினரை தாக்கிய தால் ‘என்கவுன்டர்’ செய்யப்பட்டார். தப்பிச்சென்ற மற்றொருவரான அசார் அலி என்பவரை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர். பணப்பையுடன் ஓடிய அஸ்ரூவை காலில் சுட்டுப் பிடித்தோம்; எவ்வளவு பணம் என்பது கணக்கிடவில்லை. பிடிக்கப்பட்ட 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் முழு விவரங்களும் தெரியவரும் என்றும் சேலம் சரக காவல்துறைத் தலைவர் உமா தெரிவித்தார். கூகுள் மேப் மூலம் எஸ்.பி.அய். ஏடிஎம்களை குறி கூகுள் மேப்களில் எஸ்பிஅய் ஏடிஎம்களை குறிவைத்து பார்த்து நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்குகளும் இல்லை. கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்பது விசாரணைக்குப்பின் தெரியும். கிருஷ்ணகிரி ஏடிஎம் கொள்ளையில் ஏற்கெனவே கைதானவர்களும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.
கொள்ளையர்கள் கைதில் நடந்தது என்ன?
திருச்சூரில் கொள்ளை சம்பவம் நடந்த பிறகு மேற்கு மண்டலம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்று கொண்டிருந்தது. பிடிபட்ட கண்டெய்னர் லாரி ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலைச் சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
கண்டெய்னர் லாரிக்குள் ஆட்கள் இருந்தது முதலில் காவல்துறைக்கு தெரியாது. கண்டெய்னரில் இருந்த காரை பயன்படுத்தி ஏடிஎம்களில் கொள் ளையில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட அனைவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பலில் பல்வால் மாவட்டம் 5 பேர், நூ மாவட்டத்தை சேர்ந்தோர் இருவர் ஆவர்.
ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க
கேரள காவல்துறை வருகை
குமாரபாளையம் அருகே கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்த திருச்சூர் காவல் ஆய்வாளர் ஜிஜோ தலைமையில் 4 காவலர்கள் வெப்படை காவல் நிலையம் வந்துள்ளனர். வெப்படை காவல் நிலையத்தில் வைத்து 5 கொள்ளையர்களிடமும் விசாரணை நடத்த திருச்சூர் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
ஏடிஎம் கொள்ளையர்களிடம்
கூர்மையான ஆயுதங்கள்
கொள்ளையர்களிடம் இருந்து கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொள்ளையர்களிடம் இருந்து துப்பாக்கி ஏதும் கைப்பற்றப்படவில்லை.
திருச்சூரில் கொள்ளையடித்தது
மேவாட் கொள்ளையர்கள்
திருச்சூரில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது அரியானாவைச் சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள் என்று தெரிய வந்துள்ளது.தென்னிந்தியாவில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட ஏடி.எம். இயந்திரங்களில் கொள்ளையடித்துள்ளனர்