விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப்பணி அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

viduthalai
2 Min Read

கும்பகோணம், செப்.28 விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப் படும் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.
கும்பகோணம்: அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர் களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப் படவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய தாவது:

கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங் களில் உள்ள ஊராட்சி மற்றும் அங்குள்ள விளையாட்டு வீரர் களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப் படவுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் ரூ. 86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட் டத்தின் கீழ் இதுவரை 13 மாவட்டங் களில் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு முதலமைச்சர் கோப்பைக்கு 6,71,000 போ் விண்ணப்பித்திருந்தனர். நிகழாண்டு 11 லட்சத்து 56 பேர் விண்ணப்பித் துள்ளனர். அண்மையில் நடைபெற்ற கேலோ விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தை பெற்று பெருமை சேர்த் துள்ளது.

தமிழக விளையாட்டுத் துறையை பல்வேறு துறையினர் பாராட்டி வருகின்றனர். இதேபோல், தமிழ்நாடு அரசு, ஏழை, எளிய, மாற்றுத் திறனாளி வீரர்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகின்றது. நிதி பெறவிரும்பும் விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு வாகையர் பவுண்டேஷனில் எப்போதும் வேண்டுமானாலும் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அதேபோல், அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

கும்ப கோணத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனச் சட்டப் பேரவையில் அறிவிக்கப் பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பன்னாட்டு தடகள வீராங்கனை ரோசி மீனா மற்றும் தேசிய ஆக்கி வீரர் நந்தக்குமார் ஆகியோர் தங்க ளின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக மாங்குடியில் மொழிப்போர் தியாகி ரத்தினம் உருவச் சிலையையும், வளையப் பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் நூலகத்தையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *