ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai
3 Min Read

கேள்வி 1: தமிழ்நாடு கோயில்களில் பணி அமர்த்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் பல துன்பங்களை அனுபவிப்பது ஒரு புறத்தில் இருந்தாலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் பணியமர்த்தப்படாமல் இருப்பதாக அர்ச்சகர் பயிற்சி மாணவர் சங்கம் தெரிவிக்கிறதே – என்னதான் தீர்வு?

– ஞானசேகரன், திருவண்ணாமலை

பதில் 1: இதுபற்றி நிச்சயம் அறநிலைய அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்களிடம் பேசி, அரிய தக்க நடவடிக்கைகளை எடுக்க நிச்சயம் முயற்சி எடுப்போம்!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 2: நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளில் ஆக்கப்பூர்வமானவற்றை தமிழ்நாடு அரசு நடை முறைப்படுத்த முன் வருமா?

– அரவிந்தன், பருத்திப்பட்டு

பதில் 2: நடைமுறைப்படுத்தினால்தான் மாணவர்களைக் காக்க முடியும்.
மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு இதை அனைத்து ஒருமித்த கருத்தாளர்களும் கொண்டு செல்லுவோம். இது அவசரம்; அவசியம்.

 

– – – – –

கேள்வி 3: அரசு நிறுவனங்கள் வேகமாக தனியார் மயம் ஆக்கப்பட்டு வரும் சூழலில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டாமா?

– தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில் 3: அடுத்த நாடு தழுவிய போராட்டமே – அதை மய்யப்படுத்தியே!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 4: தந்தை பெரியார் அவர்களின் மொழிப் பார்வையை பல இனவுணர்வு மிக்க பேராசிரியர்களால் கூட புரிந்து கொள்ள முடியவில்லையே?

– க. கார்த்திகேயன், ஆவடி

பதில் 4: சுயசிந்தனையும், விருப்பு வெறுப்பற்ற ஆய்வும் அதற்கு முக்கியம். பல பழைமைவாதிகளால் அவரது காலத்தை வென்ற கருத்தாக்கத்தை செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. சிலர் தங்களது வயிற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; என்ன செய்வது?

– – – – –

கேள்வி 5: ஜாதி ஒழிப்பு வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுப் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளதா?

– மதியழகன், மறவனூர்

பதில் 5: லால்குடி அருகே அமையும் – (பெரியார் உலகத்திற்கு அருகே). அதற்கான அடிக்கல் நாட்டுவிழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 6: மதுவிலக்கு அமலில் இருக்கும் மாநிலங்களில் கள்ளச்சாராயம் பெருகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா?

– இரவீந்திரன், தருமபுரி

பதில் 6: சாத்தியமில்லை.

– – – – –

கேள்வி 7: “அசைவ” லட்டு தின்றதோஷம் விளக்கேற்றினால் போகுமா?

– பிரபாகரன், சோழங்குறிச்சி

பதில் 7: தின்ற “அவாளை”த்தான் கேட்க வேண்டும்! இதைக் கேட்கும் வெளிநாட்டவர்கள் எப்படி சிரிப்பார்களோ!

– – – – –

கேள்வி 8: இலங்கையில் இடதுசாரி அரசு மலர்ந்துள்ளது என்கிறார்களே.. தமிழர்கள் நம்பிக்கை கொள்ளும் ஆட்சியை அநுர குமார திசநாயக நடத்துவாரா?

– அந்தோணி டேவிட், செங்கோட்டை

பதில் 8: நம்பிக்கையுடன் பொறுத்திருந்து பார்ப்போம்!

– – – – –

கேள்வி 9: கொலிஜியம் பரிந்துரைத்தும் நேர்மையான நீதிபதிகள் உயர்வு பெறாமல் இருப்பதும், நீதிபதிகளின் சுதந்திரத்தை நீதிபதிகளாலேயே காப்பாற்ற முடியாத ஒரு நிலைமை தோன்றியுள்ள சூழலிலும் என்னதான் தீர்வு?

– மா.கவிமணி, சைதாப்பேட்டை

பதில் 9: மைனாரிட்டி பிஜேபி ஆட்சி மாற்றமே ஒரே தீர்வு!

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 10: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெறுகிறது என காலம் கடந்து ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒத்துக்கொண்டதைப் போன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளும் காலம் விரைவில் வருமா?

– சங்கமித்ரா, மன்னார்குடி

பதில் 10: பட்டுக்கோட்டையார் பாடினார்! “உண்மை ஒரு நாள் வெளியாகும் – அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்!” இதுதான் நமது பதில்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *