கிருட்டினகிரி மாவட்ட சுயமரியாதை இயக்க குடும்பத்து முன்னோடியும், கிருட்டினகிரி கார்நேசன் திடல் அறக்கட்டளை (டிரஸ்ட்) செயலாளரும், கிருட்டினகிரியில் பெரியார் மய்யம் அமைய இடம் அளிக்க பேருதவியாக இருந்தவரும், என்னுடன் சட்டக் கல்லூரியில் உடன் பயின்ற தோழருமான, மூத்த வழக்குரைஞர் ஜி.எச்.லோகாபிராம் பி.காம்.பி.எல்., (வயது 91) அவர்கள் (26.09.2024) இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம் – மிக்க துயருறுகிறோம்.
அவரின் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி யிருக்கும் குடும்பத்தினர் மகன் ஜி.எச்.லோ.அசோக் ஆனந்து, மருமகள் அனுராதா ஆனந்து, பேரப்பிள்ளைகள் ஆதித்தியா, அஸ்வத் ஆகியோருக்கும், உற்றார் உறவி னர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிடர் கழகம் சார்பில் ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு நமது வீர வணக்கம்!
சென்னை
26.9.2024
வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இன்று (27.09.2024) காலை 11.30மணிக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.