27.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை; அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறும் அரியானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் – ராகுல் நம்பிக்கை.
* தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக சந்திப்பேன்; பதவி விலக மாட்டேன் – சித்தராமையா உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக 11, கூட்டணி கட்சிகள் 4, எதிர்க்கட்சி 9 தலைமையில் 24 நாடாளுமன்ற நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைவராகவும், தொழில்துறை குழுவிற்கு நாடாளு மன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தலைவராகவும் நியமனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குஜராத் அரசுக்கு எதிராக முன்வைத்த விமர்சனத்தை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
தி டெலிகிராப்:
* வேலைவாய்ப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்கள், ஊழியர்களை நிரந்தரமாக்காமல், தற்காலிக பணியாளர்களாகவே உருவாக்கிடும், ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* புனே மெட்ரோ திறப்பு விழா பிரதமர் வருகைக்காக இதுவரை அய்ந்து முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்சிபி (எஸ்பி) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே கிண்டல்.
– குடந்தை கருணா