சங்கரன் கோவில், செப். 27- சங்கரன்கோவிலில் சுயமரியாதைச் சுடரொளி சதாசிவம் நினைவரங்கில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 25.9.2025 அன்று மாலை 6 மணிக்கு தென்காசி மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் த.வீரன் முன்னிலையில்,மாவட்டச் செயலாளர் வடகரை.கை.சண்முகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் பொறியாளர் தே.நர்மதா ஒருமணிநேரம் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞ ரணி துணைச்செயலாளர் அ.சவுந்தர பாண்டியன், தமிழ்ப்புலிகள் கட்சி க.கனகராஜ், ஆதித்தமிழர் பேரவை வடக்கு மாவட்டச் செயலாளர் தென்னரசு ஆகியோர் உரையாற்றினார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது மிகுந்த பாசம் கொண்ட சதாசிவம் மறைவுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு வந்திருந்த அவரது இணையர் சுப்புலட்சுமி, மகன் பாரதிதாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது
தொடக்கவுரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் தந்தைபெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா மலர் உள்ளது – நன்கொடை ரூ.200 என அறிவித்தார்.
மாவட்டத்தலைவர் வழக்குரை ஞர் த.வீரன்,மாவட்டச் செயலா ளர் கை.சண்முகம், மாநில இளை ஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் ,ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் தென்னரசு, மதிமுக நகரசெயலாளர் ம.இரத்தினகுமார், நகரசெயலாளர் மோகன், தமிழரசு, சேக்திவான்அலி, தமிழ் புலிகள் கட்சி.க.கனகராஜ், பொ.கிருட்டிணமூர்த்தி ஆகியோர் மலரை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
இறுதியில் நகர கழக செயலாளர் மோகன் நன்றி கூறினார்.