திருச்சி, செப். 27- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாளான 24.09.2024அன்று காலை 11 மணியளவில் பெண்கள் பாதுகாப்பை செம்மைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் காவல் உதவிக்கான செயலி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் பிரிவின் காவல் ஆய்வாளர் வசுமதி மற்றும் உதவி ஆய்வாளர் வனிதா ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன் கொடுமைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் காவல் உதவி செயலி எவ்வாறு பயன்படுகிறது என்பதனை மாணவிகள் மத்தியில் சிறப்பாக எடுத்துரைத்தனர். மேலும் இச்செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் அவசரமான சூழ்நிலைகளிலும் ஆபத்தான நேரங்களிலும் இச்செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்ப தனையும் விளக்கினார்.
200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர்
அ.ஜெசிமாபேகம் சிறப்பாக செய்திருந்தார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட நாளை சிறப்பிக்கும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.