சென்னை, செப்.27 மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடல் நலக்குறைவால் செப்.22 அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மேனாள் தலைவர், மேனாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.26) காலை நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். எஸ்றா சற்குணம் தமிழ் சமூகத்துக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார்கள். நேற்று சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுக்கு காவல் துறை இறுதி மரியாதை செய்யப்பட்டது.