திண்டுக்கல், செப்.27- திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளைத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மருதாநதி ஆற்றின் கரையில் சடையாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத விழா நடை பெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா 25.9.2024 அன்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டனர். கோவிலில் மழை பெய்து விவ சாயம் செழிக்க வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறை வேற வேண்டியும் 100-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். பின்னர் கிடாய்கள் பலியிடப்பட்டு,சாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. பலியிடப்பட்ட கிடாய் களை வெட்டி உணவு சமைக்கப் பட்டு, பக்தர்களுக்கு வழங் கப்பட்டது. இந்த அன்னதானம் நேற்று (26.9.2024) காலை வரை விடிய, விடிய நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்துகொண்டனராம்!