புரண்டு ஓடாதா?
* காமதேனு பசு சிலையை வீட்டில் இந்த இடத்தில் வையுங்கள், செல்வம் பெருகும்
>> குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்தால் நாட்டில் செல்வம் புரண்டு ஓடாதா?
இனிமேல் என்ன இருக்கிறது?
* காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்ைத சீரழித்து விடும். – பிரதமர் மோடி தாக்கு
>> இனிமேல் சீரழிக்க என்ன இருக்கிறது?
இவருக்கு ஏன்?
* லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால், சும்மா இருக்கமாட்டேன்.
–ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை!
>> திருப்பதி ஏழுமலையானே கண்டுகொள்ளாதபோது இவருக்கு ஏன் இப்படி ஒரு கோபமும், கொந்தளிப்பும்!
நடைபாதைக் கோவில்களையும்…
* குடியிருப்போர் சங்கங்கள் வணிக நிறுவனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து நோ பார்க்கிங் போர்டு வைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
– போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு
>> அப்படியே நடைபாதைக் கோவில்களின் ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment