உதகை, செப்.27 உதகையில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் ஈரோடு மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கொடையாக வழங்கப் பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மூளைச் சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்பட்டன. இது குறித்து உதகை மருத்துவக் கல்லூரி டீன் கீதாஞ்சலி கூறியது: “நீலகிரி மாவட்டம் உதகை நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (62). இவர் சுயநினைவற்ற நிலையில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக கடந்த 25ஆம் தேதி அதிகாலை 1.05 மணியளவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ரத்தக் கொதிப்பின் காரணமாக, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது சிடி ஸ்கேன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனே வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்திருக்க லாம் என 25-ஆம் தேதி காலை 8.20 மணியளவில் கருதப்பட்டது. அவரது மகன்களிடம் இதை மருத்துவர்கள் எடுத்துக் கூறினர். உடனே மகன்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்க முன்வந்தனர். இதையடுத்து இரண்டு குருதிப் பரிசோதனைகள், விதிமுறைகளின் படி 6 மணி நேர இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டு 25ஆம் தேதி இரவு 9 மணியளவில் அர்ஜுனன் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாடு உடல் உறுப்புக் கொடை ஆணையம் விதிமுறைகளின் படி, அவரது இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் நேற்று காலை 9 மணியிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முயற்சிக்கப்பட்டு மதியம் 12 மணியளவில் நிறைவேற்றப்பட்டது. இந்த உறுப்புகள் ஈரோடு மற்றும் கோவை மருத்துவமனைகளில் உள்ள பயனாளர்களுக்கு கொடையாக வழங்கப்பட உள்ளது. இந்த உடல் உறுப்பு கொடை வாயிலாக மூன்று நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது” என்று டீன் கீதாஞ்சலி கூறினார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தொழில் கண்காட்சி – கருத்தரங்கம்
மதுரை, செப்.27 மதுரை தமுக்கம் மைதானத்தில் வரும் 28 ,29 ஆகிய இரு நாட்கள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் அண்ட் இன்னோவேஷன்ஸ் மிஷன் என்ற எம்.எஸ்.எம்.இ. கீழ் இயங்கக்கூடிய அமைப்பு ஸ்டார்ட் அப் திருவிழா 2024 என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த அமைப்பு 2021இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் தொழில் முனைவோரை உருவாக்குவது புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது மற்றும் தொழில் விருத்தி செய்ய வழிகாட்டுதலும் அதற்கான முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துவதும் மேம்படுத்த இயங்குகிறது முதலமைச்சரின் 1 டிரில்லியன் எகானமி 2030 என்ற கனவு திட்ட திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இந்த ஸ்டார்ட் அப் அண்ட் இன்னோவேஷன் மிஷன் திருவிழா மதுரையில் நடைபெறுகிறது.
இதன் நோக்கம் புதுப்புது உருவாக் குவதும் தொழில் முனைவோர்களை உருவாக்குவதும் புதுப்புது சிந்தனைகளை நுட்பம் பிரிவின் நுட்பங்களை புகட்டும் புகுத்தும் தொழில்நுட்பங்கள் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த மிஷன் செயல்பட்டு வருகிறது இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் நாளில் எம்.எஸ்.எம்.இ. திட்ட இயக்குநர் அர்ச்சனா பட்ட அர்ச்சனா பட்னாவிஸ் ஐ.ஏ.எஸ். தொடங்கி வைக்க இருக்கிறார். இரண் டாம் நாள் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதுப்புது புதிய தொழில்நுட்ப முனைவோரை ஊக்கு விக்கும் விதமாக சிறப்பித்தும் சிறந்த தொழில்நுட்ப முனைவோருக்கு பரிச ளித்தும் நிறைவு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார். திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் புதிய தொழில்நுட்பங்களை வளர்க்கும் தொழில் முனைவோருக்கு சிறந்த வழி காட்டியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
உணவுப் பொருள் முதல் ரோபோடிக்ஸ் வரை அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் கலந்து கொள்ள இருக்கிறது. பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொண்டு பயன்பெறலாம்.