கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

26.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
கேரள மாநில டி.ஜி.பி., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து பேசியது குறித்து கேரள அரசு உயர்மட்ட குழு விசாரணை அமைத்தது.
கோட்சே சிந்தனையில் ஆளுநர் இருக்கிறார்; மதசார்பின்மை அய்ரோப்பிய சிந்தனை என்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது சட்டமன்றத் தலைவர் அப்பாவு கடும் தாக்கு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகும் ஜம்மு காஷ்மீருக்கு மாநில தகுதி கிடைக்கா விட்டால் இந்தியா கூட்டணி சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தும் என்றார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தி இந்து
குஜராத்தில் உள்ள துறைமுகங்களை அதானி நிறுவனம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விதமாக ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சலுகை காலம் முடிந்த பிறகு அதானி நிறுவனம் ஒரு ஆண்டுக்கு ரூ.1700 கோடி உரிமை தொகை செலுத்த வேண்டும் என்று முதலில் மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த தொகை ஆண்டுக்கு வெறும் ரூ.340 கோடி மட்டும் தான் என்று கம்பெனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), சிறு மற்றும் நடுத்தர வணிகத்தை மூடுவதற்கும், “அதானி மற்றும் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு வழிவகுக்கும்” “பணப்பறிப்பிற்கான ஆயுதம்” என ராகுல் விமர்சனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஆர்எஸ்எஸ் எலிகளைப் போல படையெடுக்கிறது, பாஜக வியாபாரிகளாக செயல்படுகிறது. வரவிருக்கும் அரசியல் லாபத்திற்காக மாநிலத்தின் வகுப்புவாத
நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் காட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *