புதுக்கோட்டை, செப். 26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் நாடா ளுமன்றத் தொகுதியில் இந்தியா திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் மணமேல்குடி ஒன்றியம் ஜெகதாப்பட்டினம் கிராமத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அவருடன் புதுக்கோட்டை தெற்கு திமுக மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருமான எஸ்.ரகுபதியும் கலந்து கொண்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு திராவிடர் கழகத் தோழர்களால் வைக்கப் பட்டிருந்த படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்தனர்.
மேலும் வரும் 27.09.2024 அன்று மணமேல்குடியில் இருந்து ஜெகதாப்பட்டினம் வரை நடைபெற இருக்கின்ற சமூகநீதி இருசக்கர வாகனப் பேரணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து மணமேல்குடி மற்றும் ஆவுடையார் கோயில் ஒன்றிய திராவிடர் கழகத் தோழர்களுக்கு தங்களது வாழ்த்தையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மேலும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளரும் மணமேல்குடி ஒன்றியப் பெருந்தலைவருமான இ.ஏ.பரணி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் சீனியார், ஆகியோருடன் திராவிடர் கழகத்தின் சார்பில் மணமேல்குடி ஒன்றிய ஆவுடையார் கோவில் ஒன்றிய தலைவர் மு.கார்த்தி, கறம்பக்குடி ஒன்றியத் தலைவர் கணேஷ், மணமேல்குடி இளைஞ ரணியைச் சேர்ந்த முருகவேல், இளைஞரணி ரீகன், வில்லியம்ஸ், ஜஸ்டின் சுவாதி, சத்யா, ஏம்பவயல் அய்யர், பகுத்தறிவு, வெங்கடேஷ், முரளி பழனி, ஆரோக்கிய மேரி, திரிஷா, மூலியம்மாள், செபஸ்தி அம்மாள், மேரி, ஆரோக்கியசாமி, பாத்திமா, அருண், காளி, சுஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோருக்கு திராவிடர் கழக அறந்தாங்கி மாவட்டச் செயலாளர் ச.குமார் பயனாடை அணிவித்தார்.