ஆடிட்டர் ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய ‘அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் வருமான வரி சட்டத்தின் திருத்தங்களின் பரிமாணங்கள்’ என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் வெளியிட்டார். மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேல், ஆடிட்டர் கந்தசாமி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர், 102 வயதாகும் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், ஆடிட்டர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேனாள் நீதிபதி சிங்காரவேல் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்தார். (சென்னை, 24.9.2024)