உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரிலிருந்து அலகாபாத் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி வீரேந்திர சிங் யாதவ், டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் சூரஜ் மண்டல் (பி.பி.மண்டல் அவர்களின் பெயரன்) ஆகியோர் சென்னை பெரியார் திடலில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, சமூகநீதிபற்றியும், செப்டம்பர் 29 ஆம் நாள் லக்னோவில் நடைபெறும் சமூகநீதி மாநாடுபற்றியும் கலந்துரையாடினர். உடன் சமாஜ் சோட்னா நியாஸ் நிறுவன அமைப்பின் பொறுப்பாளர்கள் அபிஷேக் யாதவ் (பொறியாளர்), மகேந்திர மண்டல், வழக்குரைஞர் குர்மாஜ்சிங் ஆகியோர் வந்திருந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கலந்துரையாடலின்போது உடன் இருந்தார் (சென்னை, 25.9.2024).
சென்ற ஆண்டு போபால் நகரில் இந்திய குதிரையேற்ற கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான இருபால் இளையர் சாம்பியன்ஷிப் 2022–2023 போட்டியில் முதலாவதாக வென்ற தி.சமனா (மேனாள் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர்
ஈ.வெ.ரா.திருமகன் அவர்களின் மகள் – தற்போதைய ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் பெயர்த்தி)
நேற்று (25.9.2024) தமிழர் தலைவர் ஆசிரியரை, சென்னை பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் சட்டமன்ற உறுப்பினர்
ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அவரது வாழ்விணையர் வரலட்சுமி, மருமகள் பூர்ணிமா, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர் (சென்னை, பெரியார் திடல்).