வல்லம். செப் 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ( நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலக அளவில் பிர பலமான Green Mentors அமைப்பால் வழங்கப்படும் ‘பன்னாட்டு பசுமை பல் கலைக்கழக விருது 2024’-அய் பெருமையுடன் பெற்றுள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிலைத்ததுவும் மற்றும் பசுமைக் கல்வியிலான சிறப்பான பங்களிப்புகளை முன்னிட்டு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைகளில் முன்னிலை வகிக்கும் கல்வி நிறுவனங்க ளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அதன் புதுமையான பசுமைத் திட்டங்கள், மின்சார திறன் மேம்பாட்டு முயற்சிகள், கழிவுக் குறைப்பு திட்டங்கள் மற்றும் நிலைத்த தொழில்நுட்பங்களை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்டது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத் துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பான பங்களிப்பை உறுதி செய்கிறது.
இந்நிறுவனத்தின் சார்பாக மேரி லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணைப் பேராசிரியர் டாக்டர் அரசு செல்லையா, நியூயார்க் யுனேடேட் ஸ்டேட் ஆப் அமெரிக்காவில் நடந்த நியூயார்க் பசுமை மாநாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பெற்றார். பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ( நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பசுமை வழிகாட்டிகள் அமெரிக்கா வில் தலைமையகத்தை கொண்ட அமைப்பு உலக அளவில் கல்வி நிறுவனங் களில் பசுமையான சூழல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இந்த விருதின் மூலம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ( நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அதன் முக்கிய பசுமை திட்டங்களுக்கு பாராட்டப்பட்டது. இது கல்வி நிறுவனஙகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
இந்த வெற்றி, இந்தியா மற்றும் உலகின் பல கல்வி நிறுவனங்களுக்கு ஒரு புதிய மைல்கல்லாக அமையும் மற்றும் பசுமையான நிலைத்த எதிர்காலத்துக்கு முன்னேறுவதை ஊக்குவிக்கின்றது.