திருச்சி, செப்.26- முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் குழுபோட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகள் 50 பேர் கலந்துகொண்டனர்.
செப்.13 ஆம் தேதி நடைபெற்ற சிலம்பம், சதுரங்கம், கேரம் மற்றும் இறகுப் பந்து (Shuttle), கபடி போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். சிலம்பப் போட்டியில் எஸ்.சாலினி முதல் இடத்தைப் பெற்று ரூ.3000் பரிசுத் தொகையும், ஜெ.சிறீஷா இரண்டாம் இடம் பெற்று ரூ.2000 பரிசுத் தொகையும் மற்றும் கே.யாழினிக்கா 3ஆம் இடத்தைப் பெற்று ரூ.1000 பரிசுத் தொகையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். எஸ்.சாலினி என்ற மாணவி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பப் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்.
செப்.24 அன்று அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கோப்பை தடகளம் மற்றும் கபடி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் அ.தாஜூனிஷாபீ குண்டு எறிதலில் 3ஆம் இடம் பெற்று ரூ.1000 பரிசுத் தொகையும் பெ.லெட்சுமி, கபாடிப் போட்டியில் நான்காம் இடம் பெற்றனர்.