புதுக்கோட்டை, செப்.26- அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மதசார்பின்மை குறித்து பேசிய ஆளுநர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக் கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (25.9.2024) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அரச மைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மத சார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இந்தியாவில் உள்ள யாருமே இது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டார்கள். அரசமைப்புச் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அரசமைப் புச் சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் மீது ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக் கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக மதச்சார்பின்மை பற்றி ஆளுநர் பேசுவதா? நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
Leave a Comment