ஜெயங்கொண்டம், செப்.25- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக் கான மாவட்ட போட்டிகள் 11.9.2024 அன்று மாவட்ட அரங்கம் அரியலூரில் இறகுப்பந்து மற்றும் சிலம்பம் போட்டிகள் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு நடைபெற்றது.
இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் இறகுப் பந்து போட்டிகளில் பூஜாசிறீ இரண்டாம் இடம் பிடித்து பரிசுத் தொகை 2000 ரூபாய் பெற்றுக் கொண்டார்.
மற்றும் சிலம்பம் போட்டிகளில் தர்ஷினி இரண்டாம் இடம், பிடித்து பரிசுத் தொகை 2000, செல்வ பிரியா மூன்றாம் இடம் பிடித்து ஆயிரம் ரூபாயும் பெற்றுக் கொண்டனர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகள் மற்றும் பயிற்றுவித்த சிலம்பம் பயிற்சியாளர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரஞ்சனி, ரவிசங்கர் ஆகியோருக்கு பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.