25.9.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற போர்வையில் நடைபெறும் மோசடி முடிவுக்கு வரவேண்டும், உச்ச நீதிமன்றம் கண்டிப்பு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாஜக பறித்து விட்டது, ராகுல் குற்றச்சாட்டு.
* தெலங்கானாவில் உயர்ஜாதி ‘அரியவகை ஏழைகளுக்கு’ 10 சதவீத இட ஒதுக்கீடு; கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறி அமல்படுத்தப்படுகிறது.
தி ஹிந்து:
* பிரதமர், உள்துறை அமைச்சர் ஆளுநர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்: கருநாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க ஆளுநர் முயற்சி செய்கிறார், காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* ஹரியானாவில் ஒரு தசாப்த கால ஆட்சிக்குப் பிறகு, பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தி: மாநிலத்தின் பல்வேறு சட்டமன்றப் பிரிவுகளில் உள்ள இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவின் மீதான அதிருப்தி காணப்படுகிறது, மேலும் வாக்காளர்களின் பகுதியினர் வேலை வாய்ப்புகள், வணிக சவால்கள், விவசாய நெருக்கடி, பணவீக்கம் மற்றும் குற்றங்கள் குறித்து தொடர்ந்து கவலையுடன் உள்ளனர்.
* ஒய்எஸ்ஆர்சிபி எம்பி ஆர். கிருஷ்ணய்யா ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்தை வலுப்படுத்த முடிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்.
தி டெலிகிராப்:
* பட்டியல் ஜாதியினரின் உள் ஒதுக்கீடு குறித்த வழக்கினை அறைக்குள் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் முடிவு.
* ஊதியங்கள், தொழில்துறை உறவுகள் குறியீடு, சமூகப் பாதுகாப்புக் குறியீடு மற்றும் தொழில்சார் பாதுகாப்பு ஆகிய நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மோடி அரசு மீது தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன
– குடந்தை கருணா