மருந்தாளுநர்களை நினைவு கூறும் நாள் செப்.25.
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
– திருவள்ளுவர்
நோயுற்றவன் நோய்தீர்க்கும் ,மருத்துவன் மருந்து , மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை நான்கு என வள்ளுவம் கூறுவது போல மனித வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாக, புறந்தள்ள முடியாத சங்கிலித் தொடராக மனிதனைத் தொடரும் மகத்தான சேவையாகும்.
மருத்துவர் – மருந்தாளுநர் – பயன் பெறுவோர் எனத் தொடரும் சங்கிலிப் பிணைப்பு இன்று உயிரினத் தின் வாழ்நாளை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
மருந்தாளுநர்களின் பங்கை உலகுக்கு உணர்த்தினர் அவர்களின் சேவையை நினைவு கூறும் நாள் என்பது 2009–ஆம் ஆண்டு செப்டெம்பர் 25-ஆம் நாள் உருவாக்கப் பட்டது.
இந்நாளானது துருக்கியில் இஸ்தான்புல்லில் இயங்கி வரும் பன்னாட்டு மருந்தாளுமைக் கூட்ட மைப்பால் (International Pharmaceutical Federation) உருவாக்கப்பட்டு தொடர்ந்து அனுசரிக்கப் பட்டு வருகிறது. இவற்றை இந்திய மருந்தியல் கழகமும் அங்கீகரிக்கரித்து ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 25-ஆம் நாள் மருந்தாளுநர் நாளாக கொண்டாடப் பட்டு வருகின்றது.
உலகின் அனைத்து மூளைகளிலும் மனித உடல்நலத்தை மேம்படுத்துவதிலும் , ஆரோக்கியத்தை காக்கவும் மருந்தாளுநர்களுக்கு உள்ள பங்கை ஊக்குவிக்கவும் , அவர்களை ஆதரிக்கவும் இந்நாள் உருவாக்கப்பட்டு பயன்கள் பல தருகிறது. அனைவரும் சிறந்த சிகிச்சையைப் பெறுவதை இவர்கள் சுகாதாரப் பராமரிப்பாளர்களோடு இணைந்து உறுதி செய் கின்றனர் .
அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலமும், நோயாளி களின் தேவைகளை சேவையாக மாற்றுவதன் மூலமும் இவர்கள் பணிகள் பரந்துபட்ட நிலையைக் காண்கிறது. இன்றைய இயந்திர மற்றும் நாகரிகப் போக்கில், உலகம் சிதைந்து கொண்டிருக்கும் வேளையில், மக்கள் உட்கொள்ளும் உணவானது தரம் மற்றும் சுகாதார மற்ற துரித உணவாகவே உள்ளது. இவற்றிலிருந்து விடுபட நல்வழி படுத்தும் மருத்துவத்துறையின் மருந்தாளும் பிரிவு சிறந்த பணியென பாராட்டப் படுகின்றது.
நோயாளிகளையும் , சமுதாயத்தையும் காக்கும் கட்டாயப் பொறுப்பில் கடமையாற்றும் இவர்கள் பணி போற்றத்தக்கது.
“மருந்தே மனிதனின் ஊன்றுகோல்
மருந்தின்றி மனிதன் இல்லை”
மருந்தாளுநர்களைப் போற்றும் விதமாக நாட்டின் பல இடங்களில், இத்தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித மாக நாடெங்கிலும் அரசாங்க நிகழ்ச்சி யாகவும், மாணவர்களின் கலை நிகழ்ச்சியாகவும் கொண் டாடபட்டு சிறப்பிக்கப்படுகிறது. மேலும் மணற்சிற்பத்தை உருவாக்கியும் போற்றுகின்றனர்.
உலக மக்கள் அனைவரின் உடல்நலனில் மருந் தாளுநரின் பங்களிப்பிற்கு அவர்களுக்கு வழங்கப் படும் நன்மைகளை முன்வைத்து இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது.