சென்னை, செப்.25- தமிழநாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு பொது போக்குவரத்து சேவையை நவீனமயமாக்கும் முக்கிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின்
(டி.என்.எஸ்.டி.சி.) மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செல்பேசி செயலியை, இணையவழி (ஆன் லைன்) பயணச்சீட்டு முன்பதிவு திட்டத்திற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) மற்றும் டி.என்.எஸ்.டி.சி. பேருந்துகளுக்கான இணையவழி (ஆன்லைன்) முன்பதிவு களை எளிதாக்கும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட இணைய தளம் மற்றும் செயலி, தினமும் 2,600 பேருந்துகளில் 1.24 லட்சம் இருக்கைகளை எளிதாக வும், விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில் பயணிகள் எதிர் பார்ப்புகளுக்கு ஏற்ப வசதிகளை கொண்டுள்ளது.
பயணிகள் மேம்படுத்தப்பட்ட www.tnstc.in என்ற இணையதளத்திலும் அல்லது செல்பேசி செயலியினை முக்கிய தளங்களில் பதிவிறக்கவும் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
– இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 3 ஓட்டுநர்கள் மற்றும் 11 நடத்துநர்கள் என மொத்தம் 14 இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த 3 இறந்த பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் ஓட்டுநர் உடன் நடத்து நருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.