24.9.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களை பிளவுபடுத்தும் சக்தி பாஜக – ராகுல் குற்றச்சாட்டு.
* இந்தியா கூட்டணி 56 இஞ்ச் மோடியை மனதளவில் வீழ்த்தியுள்ளதாக, ராகுல் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்.
* ‘ஜாதிவாரி கணக்கெடுப்பு’ என்று சொல்லக் கூட பயப்படும் பிரதமர் மோடி, ‘பகுஜன்கள்’ தங்கள் உரிமைகளை பெறுவதை விரும்பவில்லை – ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகாயித் மத்திய பிரதேசத்தில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார், வேளாண் பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை கேட்டு போராட்டம்.
* முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, பிறகு உள்ளாட்சி தேர்தல்: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் திட்டவட்டம்.
தி டெலிகிராப்:
* குளோபல் அய்அய்எம் மேனாள் மாணவர் நெட்வொர்க் மற்றும் அறிஞர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2025 முதல் பிஎச்.டி. சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அய்அய்எம் அகமதா பாத் முடிவு செய்துள்ளது.
*சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த (ஓபிசி) வேட்பாளர்கள் அரசுப் பணியில் சேருவதில் உள்ள சிரமங்களை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடி தலையிடக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடிதம்.
– குடந்தை கருணா