மும்பை, செப். 24– ஒன்றிய அரசு புதிய டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனை தொடர்ந்து வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதனிடையே, Fact check அமைப்பை உருவாக்கும் வகையில் ஒன்றிய அரசு மீண்டும் திருத்திய விதிமுறைகளை வெளியிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த விதிமுறைகள் பேச்சு மற்றும்கருத்து சுதந்திரத்தின் மீதானதாக்குதல் என்று உச்சநீதிமன்றம் கூறியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரைFact check யூனிட்டை அமைக்ககூடாது என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து,வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி, தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், டிஜிட்டல் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 19-க்கு எதிரானது என்று கூறி, அதற்கு தடை விதித்த உத்தரவை உறுதி செய்வதாக தீர்ப்பளித்தார்.
வங்கி ஊழியர்களின்
ஓய்வூதிய சீரமைப்பு சட்டத்தை ஒன்றிய அரசு தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்
வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், செப்.24- நாடு முழுவதும் உள்ள ஏழு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மறு பரிசீலனையை (Pention Updation) நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசும், இந்தியா வங்கிகள் நிர்வாகமும் முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் பேங்க் மேனாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டமைப்பின் எட்டாவது பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலைமையில் 22.9.2024 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாளிகை, சரோஜ் நினைவகத்தில் நடைபெற்றது.
துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் எம்.முருகையா மற்றும் டீ.சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ரகுநாதன் அனைவரையும் வரவேற்றார். ஆர்.லோகநாதன் நன்றி கூறினார்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்கள் ஓய்வு பெறும்போது பெறும் கம்யூட்டேஷன் தொகையை 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பிடித்தம் செய்யும் நடைமுறையை தாமதமின்றி உடனே நடைமுறைப்படுத்துவதோடு கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை 8.5 சதவிகித வட்டியுடன் ஓய்வூதியர்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
வங்கி ஓய்வூதியர் பென்ஷன் சீரமைப்பு குறித்த சட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதிய சீரமைப்பை பெறாமல் ஏறத்தாழ 1,50,000 ஓய்வூதியர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் மரணமடைந்துள்ளனர்.
வங்கி ஓய்வூதியர்களின் “ஹெல்த் இன்சூரன்ஸ் பிரிமியத்தை பொதுத்துறை வங்கி நிர்வாகங்களே ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வங்கி மருந்தகங்களை நிறுவ இந்திய ஸ்டேட் வங்கி தாமதமின்றி முன்வர வேண்டும்” என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் இக்கூட்ட மைப்பின் செயலாளர் எம்.கே.மூர்த்தி, உதவி பொருளாளர் வீ.பூமிநாதன், நிர்வாகக்குழு உறுப் பினர்கள் திருவாரூர் என்.பாண்டுரெங்கன், கோவை எம்.ரகுநாதன், புதுச்சேரி எஸ்.கருணாகரன், வேலூர் ஆர்.லோகநாதன், மதுரை பரவை
எஸ்.பாலசுப்பிரமணியன், உரத்தநாடு ஊழியர் சங்க மேனாள் செயலாளர் வி.சம்பத் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.