சென்னை, செப். 24- சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் மிச்செலின் இந்தியா பிரீமியம் கார் டயர் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.
இதன் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கையின் மூலம் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகளைச் செய்து வருகின்றன.
தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால், தொழில் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
தற்போது மிச்செலின் இந்தியா பிரீமியம், கார் டயர் தொழிற்சாலையை சென்னை அருகே தேர்வாய் கண்டிகையில் 564 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவ உள்ளது.
நாட்டில் பிரீமியம் டயர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், இத்தொழிற்சாலை நிறுவப்படுகிறது. பிரான்சை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய டயர் நிறுவனமான மிச்செலின், இந்தியாவில் அதன் அடுத்த கட்ட உற்பத்தி விரிவாக்கமாக சென்னையில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள ‘மிக்செலின் இந்தியா’ நிறுவனத்தில் 2 ஆயிரத்து 800 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சென்னையிலும் நிறுவப்படு வதன் மூலம் கூடுதலாக 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.