கால்நடை நலக் கல்வி மய்ய இயக்குநர் தகவல்
சென்னை, ஆக 5 கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.49 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது என கால் நடை நலக்கல்வி மய்ய இயக்குநர் சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெண் தொழில் முனைவோருக் கான சந்திப்பு, ‘தலைவிகள்‘ என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வக்குமார், தொடக்க நிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் கால்நடை நலக்கல்வி இயக்குநர் சவுந்தர ராஜன் உள்பட ஆராய்ச்சியா ளர்கள், 170-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது, கால்நடை மருத்துவ அறிவியல் கல்வியில், பெண்களுக் கான வேலைவாய்ப்புகள், தொழில் பயிற்சிகள், ஒன்றிய, மாநில அரசுகள் நிதியுதவிக்கான வாய்ப் புகள் குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, ‘தலைவிகள்; உலகெங்கிலும் உள்ள வெற்றி பெற்ற பெண் தொழில் முனை வோரை வழிகாட்டியாக கொண்டு ஊக்கம் பெறல்’ அடிப்படையாக கொண்டுதயாரிக்கப்பட்ட விழா மலரை துணைவேந்தர் கே.என்.செல்வக்குமார் வெளியிட்டார். அப்போது, அவர் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மகளிர் தொழில் முனைவோரின் பங்கு முக்கியமானது. முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் 10 சதவீதம் பேராவது தொழில்முனை வோர் களாக மாற வேண்டும் என்றார். இதையடுத்து, தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு மற்றும் கால்நடை நலக்கல்வி இயக்குநர் சவுந்தரராஜன் கூறிய தாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவஅறிவியல் பல்கலையில், தொடக்கநிலை தொழில் உருவாக்க அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் விலங் கியல்சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்வோர் இணையலாம். அவர்களின் புதிய கண்டுபிடிப் புக்கான முயற்சிகளை, பல்கலைக் கழக ஆய்வகத்திலேயே மேற் கொள்ளலாம்.
அத்துடன், நிதி ஆதாரங்களும் வழங்கப்படுகின்றன. சில கண்டு பிடிப்புகளுக்கு அதிக தொகை செலவாகும்பட்சத்தில், மாநில அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் நிதியுதவி அளிக்கிறது. அதேபோல, ஒன்றிய அரசும் ரூ.49 லட்சம் வரை நிதியுதவி அளிக்கிறது.
எனவே, கால்நடை மற்றும் விலங்கியல் சார்ந்த ஆய்வுகள் கண்டுபிடிப்பு களுக்கு நாங்கள் வழிகாட்டுதல்கள் வழங்கு வதுடன், நிதியுதவிக்கும் உதவுகி றோம். இவ்வாறு சவுந்தர ராஜன் கூறினார்.