கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி பங்கேற்று சிறப்புரை
மன்னார்குடி, செப். 23 மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள், மன்னார்குடி நகர திராவிடர் கழக மேனாள் செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கே.ராஜகோபால் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 21.9. 2024 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மன்னார்குடி பந்தலடியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு, நகர கழக தலைவர் எஸ்.என்.உத்தராவதி தலைமை வகித்தார்.
மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செய லாளர் கோ. கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வை. கவுதமன், கழகப் பொதுக்குழு உறுப்பினர்
ப.சிவஞானம், ப.க. மாநில அமைப்பாளர் சி. ரமேஷ், மன்னார்குடிஇரா.கலியமூர்த்தி, மாவட்ட ப.க. அமைப்பாளர் தங்க. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், கிராமப்புற பிரச்சார மாநில அமைப்பாளர் அதிரடி க. அன்பழகன், கழகப் பேச்சாளர் இராம. அன்பழகன், கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சு. சிங்காரவேலர் ஆகி யோர் தொடக்க உரையாற்றினர்.
பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரைய்யன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் முத்தையன், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அருணகிரி, பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா. அழகிரிசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார்
கூட்டத்தில், திமுக மாவட்ட ஊராட்சி மன்றக் குழுத் தலைவர் தலையாமங்கலம் ஜி.பாலு, திமுக மாவட்ட அவைத் தலைவர் மேலவாசல் க.தனராஜ், மன்னார்குடி நகர கழக செயலாளர் வீரா.கணேசன், மன்னார்குடி நகர் மன்ற தலைவர் மன்னை த.சோழராஜன், திமுக மேனாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கு.பா .பாபு, காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் கோ.வி.மீனாட்சி சுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் வி.எம். கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் கோ.தாயுமானவன், நீடா மங்கலம் ஒன்றிய கழகத் தலைவர் தங்க. பிச்சைக்கண்ணு, கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி. குமார், மாவட்ட பக இணைச் செயலாளர்
இரா.கோபால், மாவட்டத் துணைத் தலைவர்
ச. முரளிதரன், மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் மன்னை சித்து, ஒன்றிய இளைஞரணி தலைவர் பி. இளங்கோவன், பக நகர தலைவர் கோவி. அழகிரி, மன்னார்குடி ஒன்றிய துணைச் செயலாளர் கவிஞர் கோ.செல்வம், மன்னார்குடி நகர துணைத் தலைவர் வே .அழகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.இளங்கோவன், கோட்டூர் ஒன்றிய தலைவர் ஆர். நாராயணசாமி, மன்னார்குடி நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் மா.பொன்னுசாமி, மன்னார்குடி சிவா.வணங்காமுடி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ப. அய்யப்பன், மன்னார்குடி ஜெ.சம்பத், வி.செல்வம், ப.க. தோழர் பி.கே.சாந்தி சேகர், மேலவாசல் அ.குணசேகரன், மன்னார்குடி இரா.வெங்கட்ராமன், பெரியார் பெருந்தொண்டர்கள் மேலதிருப்பாலைக்குடி எம் .கோவிந்தராசு, மேலவாசல் கோ. திரிசங்கு, மன்னார்குடி நகர ப.க. செயலாளர் பேராசிரியர் கோ. காமராசு ,மாணவர் கழக நிர்வாகி பெ. அன்புச்செல்வம், பகுத்தறிவாளர்கள் கழகம் ச.அறிவானந்தம், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மு. தமிழ்ச்செல்வம் கே.இரத்தினவேல், கோட்டூர் ஒன்றிய பக செயலாளர் கா.சுருளிராஜ் , நீடாமங்கலம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் க.முரளி, கோட்டூர் ஒன்றிய ப.க. தலைவர் சு.இராமலிங்கம் , கோட்டூர் ஒன்றிய ப.க. அமைப்பாளர் சுரேஷ், ப.க. நெம்மேலி ஆர்.பாலகிருட்டிணன், ம கதை எம்.எஸ்.சேகர், ப.க. வ. காமராசு தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்ராபதி தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்
கூட்ட துவக்கத்தில் புரபொசர் ஈட்டி கணேசனின் ‘‘மந்திரமா தந்திரமா?’’ என்னும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்கத்தில், மாவட்டத் துணைத் தலைவர் ந. இன்பக்கடல் வரவேற்றார். நிறைவில், மாவட்டத் துணைச் செயலாளர் விக்கிரபாண்டியம் புஷ்பநாதன் நன்றி கூறினார் .
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மன்னை நகரம் முழுவதும் கழகக் கொடிகள் பட்டொளி வீசின; விளம்பரப் பதாகைகள் சுவரொட்டிகள் நகர் முழுவதும் காணப்பட்டன.