நம் நாட்டு அரசியல் போராட்டமென்பது மக்களிடம் ஓட்டுப் பெற்ற பிரதிநிதிகளால் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த மக்களும், அந்தப் பிரதிநிதிகளும் அந்த அரசியல் சட்ட திட்டங்களுக்குக் கீழடங்கிக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களேயன்றி தம் இஷ்டம் போல் நடந்து கொள்ள முடியுமா? நாம் படம் எரிப்பது என்பது நமது நாட்டை நம் இனத்தான் அல்லாதவன் ஆளக்கூடாது என்கின்ற இன உணர்ச்சி காரணமாக நடத்தும் இனப் போராட்டமேயல்லாது ஆட்சி முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்காகவோ அல்லது நமது சுயநலத்தின்படியானது என்று கூற முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’