வல்லம், செப்.23– பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய அளவி லான பெரியார் தொழில்நுட்பக் கருத்தரங்கு 05.09.2024 அன்று காலை 10.00 மணியளவில் இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பல்வேறு பாலிடெக்னிக்களிலிருந்தும் சுமார் 135 மாணவர்கள் கலந்துக் கொண்டு தயாரித்து அனுப்பிய 70 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
13.09.2024 பிற்பகல் 3.00 மணியள வில் நடைபெற்ற பரிசளிப்பு விழா வில் தலைமையுரையாற்றிய இக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா இந்த கருத்தரங்குஇ மாணவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.
பின்பு வாழ்த்துரை வழங்கிய இக்கல்லூரி துணைமுதல்வர் தி.விஜயலெட்சுமி பரிசு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டதோடு இது போன்ற கருத்தரங்குகளில் அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சிறப்புரையாற்றிய கட்டட எழிற் கலைத்துறை துறைத்தலைவர் கே.பி.வெள்ளியங்கிரி மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் ஜீ.இராஜாராமன் ஆகியோர் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு சிறந்த தொழில்நுட்ப சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
விழாவின் முன்னதாக இப்பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் துறைத்தலைவர் க.ரோஜா வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் கட்டுரை வாசித்தளித்த மாணவர்களுக்கு முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் ரூ.1500 மற்றும் ரூ.1000 ஆகிய பணப் பரிசுகள் மற்றும் சான் றிதழ்கள் வழங்கப்பட்டன.
இக்கல்லூரியின் கணினியியல் துறைத்தலைவர் எம்.சண்முகப் பிரியா அவர்கள் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.