பார்ப்பனர் வயிற்றில்….
* கடவுள் திருப்பதி கோவில் லட்டில் இறைச்சிக் கொழுப்புக் கலப்படம் – நிவாரணத்துக்காக சாந்தி ேஹாமம்!
>> எது நடந்தாலும், இறுதியில் அது பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக்கட்டதானா?
இவரும் அவரும் ஒன்றா?
* மோடி ஆட்சி என்பது காமராஜர் ஆட்சி!
– தமிழிசை சவுந்திரராஜன்
>> இந்தியாவில் விஸ்வகர்மா யோஜனா என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரும் மோடியும், குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த காமராஜரும்
ஒன்றா?
கடவுள் அரசியல்!
* கடவுள் பெயரால் அரசியல் நடக்கிறது!
– ஆந்திர மாநில மேனாள் முதலமைச்சர் ஜெகன்மோகன்
>> இந்தியாவில் கடவுள் பெயரால் நடக்கும் ஆரிய அரசியல்தானே!
அவனின்றி….
* கோவிலுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைக் காணவில்லை.
– சுவரொட்டி ஒட்டி தேடும் கிராம மக்கள்
>> அவன் இன்றி ஓரணுவும் அசையாதே!