வேலூர், செப்.22 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ‘‘சமூகநீதி நாளை’’யொட்டி அரசு வேலூர் மருத்து வக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக அலுவலக வளாகத்தில் 16-09-2024 அன்று முற்பகல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் ரதி திலகம் தலைமை வகிக்க, குடியிருப்பு மருத்துவ அலுவலர் மருத்துவர்
சி. இன்பராஜ் முன்னிலை வகித்து ‘‘சமூகநீதி நாள்’’ உறுதிமொழியினை வாசிக்க, மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.