திருச்சி, செப். 22- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் – பெரியார் உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம் தலைமையில் நடைபெற்றது. பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் அ.கோவிந்தராஜ் வரவேற்றார். பதிவாளர் ஆர்.காளிதாசன் வாழ்த்துரை வழங்க தேர்வு நெறியாளர் பா.ஜெயப்பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் 2021-2022, 2022-2023, 2023-2024 ஆண்டுகளுக்கான பெரியார் விருதுகள் வழங்கப் பட்டன.
மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ நூலுக்கு பெரியாரியல் குறித்த சிறந்த நூலுக்கான ‘பெரியார் பரிசு’ வழங்கப்பட்டது.
மூத்த பெரியாரியல் அறிஞருக்கான ‘பெரியார் சிறப்பு விருது’ பாசறை
மு. பாலன், தி.அன்பழகன், முனைவர் ப.கமலக்கண்ணன் ஆகியோருக்கும், பெரியாரியல் அடிப்படையில் சமூகப் பணியாற்றுபவர்களுக்கான ‘பெரியார் விருது’ முனைவர் ஆர்.கெ.துரைசாமி, ஆசிரியர் கு.வரதராசன், முனைவர் தி.நெடுஞ்செழியன் ஆகியோ ருக்கும், பெரியாரியல் குறித்த சிறந்த நூலுக்கான ‘பெரியார் பரிசு’ முனைவர் உ. பிரபாகரன், கவிஞர் ஆ.மலைக்கொழுந்தன், கி.தளபதிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.