பொறியாளர் க.காசி விசுவநாதனின் தாயார் திருமதி நீலாவதி (வயது 77) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (22.9.2024) காலை மறைவுற்றார். மறைவுச் செய்தி அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேரில் சென்று அம்மையார் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தார். இன்று மாலை திரு.வி.க. நகர் இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. அவருக்கு இணையர் கன்னியப்பன் மற்றும் 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். உடன் வடசென்னை மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன், த.மரகதமணி உள்ளனர்.