திருவாரூர் மய்ய மாவட்ட விசிக செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள தங்க. தமிழ்ச்செல்வன், திருவாரூர் மாவட்ட செயலாளர் (வடக்கு) ர.தமிழ் ஓவியன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் (தெற்கு) ஆ.வெற்றி ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றதின் மகிழ்வாக திருவாரூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். கழகத்தின் சார்பில் கி.அருண்காந்தி, மாவட்ட கழக துணைத்தலைவர், மேனாள் மண்டல செயலாளர் க.முனியாண்டி, பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார், நகர கழக செயலாளர் ப.ஆறுமுகம் ஆகியோர்வாழ்த்தி சிறப்பு செய்தனர்.